பாலிவுட்டின் பெரிய ஹீரோக்கள் மோசம்.. நடிகை கங்கனா ரணாவத் புகார்… அளித்துள்ளார்.
இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறியுள்ள நடிகை பாயல் கோஷுக்கு பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பல்வேறு பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
“பாலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோக்கள் என்னிடம் இதேபோல நடந்து கொண்டுள்ளனர். கேரவன் வேன், தனி அறை, பார்ட்டி, நடன நிகழ்ச்சிகளின்போது ஹீரோக்கள் தங்களது அந்தரங்க உறுப்பை என்னிடம் காட்டினர். வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தனர்.
பாலிவுட்டில் பெரும்பாலானோர் பொய்யாக திருமணம் செய்து கொண்டு இளம்பெண்களை ஏமாற்றுகின்றனர். பாலிவுட் முழுவதும் பாலியல் அரக்கர்கள் நிறைந்துள்ளனர்.
நடிகை பாயல் கோஷ் போல பல்வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது நடிகை கங்கனா ரணாவத் அடுக்கடுக்கான பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது மகாராஷ்டிர அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.