நடிகை கங்கணா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க வன்முறை சம்பவங்கள் குறித்து நடிகை கங்கணா ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார். “பாஜக வெற்றி பெற்ற அசாம், புதுச்சேரியில் எவ்வித வன்முறையும் நடைபெறவில்லை. ஆனால் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்ற மேற்குவங்கத்தில் நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்படுகின்றனர். மேற்குவங்கம் பற்றி எரிகிறது” என்று கங்கணா குறிப்பிட்டிருந்தார்.
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி குறித்தும் நடிகை கங்கணா எதிர்மறையாக விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து கங்கணாவின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “விதிகளை மீறி பதிவுகளை வெளியிட்டதால் அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகை கங்கணா கூறியபோது, “ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்தது. அமெரிக்காவை சேர்ந்த வெள்ளையின மக்கள், அவர்கள் பிரவுண் நிற மக்களை அடிமைப்படுத்த நினைக்கின்றனர். எனது கருத்துகளை வெளிப்படுத்த சினாமா உள்ளிட்ட பல்வேறு தளங்கள் உள்ளன. அதன் வாயிலாக எனது கருத்துகளை எடுத்துரைப்பேன்”: என்று தெரிவித்தார்.