ஓடுங்க..ஓடுங்க..ஓடிக்கிட்டே இருங்க…

கடந்த 2002-ம் ஆண்டில் ‘பைவ் ஸ்டார்’ படம் மூலம் அறிமுகமான நடிகை கனிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


தமிழில் பைவ் ஸ்டாரில் தொடங்கி எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு, ஓ காதல் கண்மணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


மதுரையில் பிறந்த கனிகாவின் பெயர் திவ்யா வெங்கடசுப்பிரமணியம். திரைப்படத்துக்காக கனிகாவாக மாறினார். ரசிகர்கள், ரசிகைகளை உற்சாகப்படுத்தும் வகையிலும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும் பல்வேறு வீடியோக்களை சமூக வலைதளத்தில் கனிகா வெளியிட்டு வருகிறார்.


சில நாட்களுக்கு முன்பு தனது ஓட்டப்பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதற்கு முன்பும் பல்வேறு உடற்பயிற்சி வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார். அவை தொகுக்கப்பட்டுள்ளன.
தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது அவசியமாகிறது. அதற்காக நீங்களும் கனிகா போல ஓடுங்க, ஓடுங்க, ஓடிக்கிட்டே இருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *