கீர்த்தி சுரேஷ் அன்று.. இன்று…

பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார், நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி திரைப்படம் மூலம் பெரும் புகழ் பெற்ற அவர், மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.


கடந்த 2018-ம் ஆண்டில் வெளியான ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை உலகத்துக்கு பறைசாற்றினார். திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் புஷ்டியாக இருந்தார். அவரது கொழுக், மொழுக் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திழுத்தது.


தீவிர உடற்பயிற்சியால் தற்போது அவர் உடல் மெலிந்து ஸ்லிம்பாக காட்சியளிக்கிறார். அவரது அன்றைய புகைப்படமும் இப்போதைய புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


கொரோனா அச்சுறுத்தலால் திரைப்படத் துறை முடங்கியிருப்பதால், வீட்டில் தங்கியிருக்கும் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் வாயிலாக தனது இசைத் திறன், சமையல் கலை, யோகா திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *