வங்க மொழி நடிகை கோயல் மாலிக், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. மேற்குவங்க மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த மாநில தலைநகர் கொல்கத்தாவில் வசிக்கும் பிரபல நடிகை கோயல் மாலிக்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மட்டுமல்ல, அவரது கணவர் நிஸ்பால் சிங், நடிகையின் தாய்ஆகியோரையும் வைரஸ் தொற்றியுள்ளது.
கடந்த மே மாதம் நடிகை கோயல் மாலிக்குக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகை குடும்பத்தினருக்கு வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தெரியவில்லை. அவரும், குடும்பத்தினரும் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.