கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க மாளவிகா மோகனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில் கடந்த 28-ம் தேதி தனுஷ் பிறந்த நாளை கொண்டாடியபோது,அவருக்கு மாளவிகா வாழ்த்துகளை தெரிவித்தார். விரைவில் இருவரும் திரைப்படத்தில் இணைவோம் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சேலையில் அசத்தினார். இன்று கைக்கடிகாரத்துடன் கலக்கலாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
அவரது புகைப்படங்கள் இணையத்தை பற்றி எரிய வைத்துள்ளன.