தடுப்பூசி போட்டுக் கொண்ட நதியா

நடிகை நதியா 2-வது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. தற்போது அம்மா கதாபாத்திர வேடங்களில் நடித்து வருகிறார்.  54 வயதானாலும் இளம் நடிகைகளுக்கு இணையாக இளமையாக தோற்றம் அளிக்கிறார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த நதியா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அவர் கொரோனா 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

“மும்பை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். என்னைப்போல நீங்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்” என்று நதியா அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *