பாஜகவில் நடிகை நமீதா, காயத்ரி ஜெயராமுக்கு பதவி

தமிழக பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நடிகை நமீதா பாஜகவின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை காயத்ரி ஜெயராம் கலாச்சார பிரிவு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்


தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் முருகன் இன்று காலை வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாசியுடன், தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் ஆணைப்படி புதிய மாநில நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் முருகனை சந்தித்து ஆசி பெற்ற நடிகை காயத்ரி ஜெயராம்

திமுகவில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த வி.பி. துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நடிகை நமீதா மத்திய சென்னை கிழக்கின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை காயத்ரி ரகுராம் கலாச்சார பிரிவு மாநில தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


வானதி ஸ்ரீனிவாசன், நைனார் நாகேந்திரன், சக்கரவர்த்தி, முருகானந்தனம், எம்.என்.ராஜா, மகாலட்சுமி, கனக சபாபதி, புரட்சி கவிதாசன் ஆகியோர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில பொதுச்செயலாளர்களாக ராகவன், செல்வகுமார், சீனிவாசன், கரு நாகராஜன் ஆகியோரும் மாநில செயலாளர்களாக சண்முகராஜ், டால்பின் ஸ்ரீதர், வரதராஜன், பாஸ்கர், உமாரதி, மலர்கொடி, கார்த்தியாயினி, பார்வதி நடராஜன், சுமதி வெங்கடேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.


மாநில பொருளாளராக எஸ்.ஆர். சேகர், இணை பொருளாளராக சிவ சுப்பிரமணியன், மாநில அலுக செயலாளராக சந்திரன், இளைஞர் அணி மாநில தலைவராக வினோஜ் பி செல்வம், மகளிர் அணி மாநில தலைவராக மீனாட்சி, எஸ்.சி. அணி தலைவராக பொன் வி.பாலகணபதி, எஸ்டி அணி மாநில தலைவராக சிவப்பிரகாசம், விவசாய அணி மாநில தலைவராக நாகராஜ், ஓபிசி அணி தலைவராக லோகநாதன், சிறுபான்மையினர் அணி தலைவராக ஆஷிம் பாஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் மீனவர், நெசவாளர், வர்த்தகம், கலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு மாநில தலைவர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *