ரம்யா கிருஷ்ணனுக்கு 50 வயதா..

ரம்யா கிருஷ்ணனுக்கு 50 வயதா..என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.


கடந்த 1970 செப்டம்பர் 15-ம் தேதி சென்னையில் ரம்யா கிருஷ்ணன் பிறந்தார். இவர் மறைந்த நடிகரும் பத்திரிகையாளருமான சோ ராமசாமியின் உறவினர் ஆவார். தன்னுடைய 14-வது வயதில் வெள்ளை மனசு திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திராவுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் அறிமுகமானார்.

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை 260-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். எந்த வேடம் கொடுத்தாலும் தனது நடிப்பால் மிளிர்வார்.

பாகுபலி திரைப்படம் அவரது திரையுலக வாழ்க்கையில் மணிமகுடமாக அமைந்தது. வெள்ளித்திரை மட்டுமன்றி சின்னத் திரை, வெப்சீரியலிலும் சூறாவளியாக சுழன்றடித்து வருகிறார்.

மகன் ரிக்விக் உடன் ரம்யா கிருஷ்ணன்


கடந்த 2003-ம் ஆண்டில் தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை, ரம்யா கிருஷ்ணன் திருமணம் செய்தார். அவர்களுக்கு ரித்விக் வம்சி என்ற மகன் உள்ளார்.


இளம் நடிகைகளுக்கு போட்டியாக ரம்யா கிருஷ்ணன் இன்றும் இளமையாகவே காட்சியளிக்கிறார். அவர் இன்று தனது 50-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். அந்த புகைப்படத்தை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ரம்யா கிருஷ்ணனுக்கு 50 வயதா… என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கணவர் கிருஷ்ண வம்சியுடன் ரம்யா கிருஷ்ணன்
தந்தை கிருஷ்ணனுடன் ரம்யா கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *