பஞ்சாபின் சண்டிகரை சேர்ந்த பிரபல நடிகை சமிக்சா சிங். தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி என பல்வேறு மொழிகளின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கார்த்திகை, பஞ்சாமிர்தம், முருகா, தீ நகர், மெர்க்குரி பூக்கள், மனதோடு மழைக்காலம், அறிந்தும் அறியாமலும் ஆகிய திரைப்படங்களில் சமிக்சா நடித்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி 10 வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இதன்பின் சிங்கப்பூரை சேர்ந்த ஷால் ஒஸ்வால் என்ற தொழிலதிபருடன் காதல் மலர்ந்தது.இருவரும் கடந்த 3-ம் தேதி சிங்கப்பூரில் திருமணம் செய்து கொண்டனர்.
ஷால் ஒஸ்வாலும் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.