ஓடி ஒளிகிறார் நடிகை ரியா! – ரூ.15 கோடி பணம், சொத்துகளை பறித்து சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை வழக்கு

பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். போதிய படவாய்ப்பு இல்லாமல், நிதி நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


நடிகர் சுஷாந்தின் தற்கொலை வழக்கில் ஆரம்பம் முதலே அவரது காதலியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது சந்தேகம் இருந்து வருகிறது. இதனை சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் உறுதி செய்துள்ளார். பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் நடிகை ரியா மீது அவர் நேற்று புகார் கொடுத்தார்.

நடிகை-ரியா-சக்கரவர்த்தி
நடிகை-ரியா-சக்கரவர்த்தி

அதில் ரியாவுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களை அவர் கூறியுள்ளார்.
“சுஷாந்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.15 கோடியை ரியா எடுத்துள்ளார். அவரிடமிருந்த தங்க நகைகள், நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை பறித்துள்ளார். சுஷாந்தின் நம்பிக்கைக்கு உரிய பாதுகாவலர் ஒருவர், ரியாவிடம் பணியாற்றி வந்தார்.

அவரை வேலையை விட்டு ரியா நீக்கியுள்ளார்.
இதன்காரணாக சுஷாந்த் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஓய்வெடுப்பதற்காக கர்நாடகாவின் கூர்க் பகுதிக்கு செல்ல சுஷாந்த் திட்டமிட்டிருக்கிறார். சுஷாந்த் மன நோயாளி என்று ஊடகங்களில் செய்தியை கசியவிடுவேன் என்று ரியா அடிக்கடி மிரட்டியுள்ளார்.
இந்த உண்மைகள் அனைத்தையும் தனது சகோதரியிடம் சுஷாந்த் கூறியிருக்கிறார்.

மும்பை-உடற்பயிற்சி-கூடத்தில்-நடிகை-ரியா
மும்பை-உடற்பயிற்சி-கூடத்தில்-நடிகை-ரியா

ரியாவிடம் சிக்கிக் கொண்டு தவிப்பதாக புலம்பியுள்ளார். எனது மகனின் பணம், சொத்துகளைப் பறித்து, அவரை தற்கொலைக்கு நடிகை ரியா தூண்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் தனது மனுவில் கூறியுள்ளார்.இதுதொடர்பாக பாட்னா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரியாவிடம் விசாரணை நடத்த மும்பைக்கு புறப்பட்டுள்ளனர்.

விசாரணைக்குப் பயந்து ரியா ஒடி ஒளிந்து கொண்டிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரியா சார்பில் மும்பை ஐகோர்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதி செய்யும் வகையில் மூத்த வழக்கறிஞர் ஆனந்தி பெர்னாண்டஸ் நேற்றிரவு ரியா வீட்டில் முகாமிட்டிருந்ததை ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *