ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த நடிகை ரோஜா நகரி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.
அவரது தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்காக ஒதுக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை ரோஜா புத்தூரில் அண்மையில் தொடங்கிவைத்தார். அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் அன்பு தொல்லையால் 108 ஆம்புலன்ஸை ரோஜா ஓட்டிச் சென்றார். ஒலிபெருக்கில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளது. ரோஜாவிடம் ஆம்புலன்ஸ் ஓட்ட லைசென்ஸ் உள்ளதா, அவர் முகக்கவசம் அணியாமல் ஆம்புலன்ஸை ஓட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் வலியுறுத்தியுள்ளது.