கோமாளி நடிகையின் பெருந்தன்மை

கோமாளி நடிகையின் பெருந்தன்மை குறித்து தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவை சேர்ந்த பிரபல நடிகை சம்யுக்தா ஹெக்டே (வயது 22). கடந்த 2016-ம் ஆண்டில் எம்.டி.வி. மூலம் கலையுலகில் அவர் கால் பதித்தார்.

அதே ஆண்டில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் அறிமுகமானார். தமிழில் வாட்ச்மேன் என்ற படத்தில் சம்யுக்தா அறிமுகம் ஆனார்.

அடுத்து கோமாளி, பப்பி ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். இதில் கோமாளி படம் மூலமே சம்யுக்தா தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

நடிகை சம்யுக்தா ஹெக்டே
நடிகை சம்யுக்தா ஹெக்டே

தெலுங்கு திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். திரையுலகில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் கடந்த 2018-ம் ஆண்டு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பூங்காவில் வாக்குவாதம்

சமூக வலைதளங்களில் சம்யுக்தா மிகவும் ஆக்டிவ்வாக உள்ளார். உடற்பயிற்சி, சாசக நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்ட அவர் அவை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள பூங்காவில் சம்யுக்தாவும் அவரது தோழிகளும் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கவிதா ரெட்டிக்கும் சம்யுக்தாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அரைகுறை உடையில் சம்யுக்தா உடற்பயிற்சி செய்வதாக கவிதா ரெட்டி குற்றம் சாட்ட, அதற்கு சும்யுக்தா பதில் அளிக்க வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

காங்கிரஸ் தலைவர் கைது

காங்கிரஸ் மூத்த தலைவர் கவிதா ரெட்டி மீதான புகாரை நடிகை சம்யுக்தா வாபஸ் பெற்றுள்ளார். கோமாளி நடிகையின் பெருந்தன்மை குறித்து தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் கவிதா ரெட்டி மீதான புகாரை நடிகை சம்யுக்தா வாபஸ் பெற்றுள்ளார். கோமாளி நடிகையின் பெருந்தன்மை குறித்து தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் தற்போது முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், சம்யுக்தா அளித்த புகாரின்பேரில் காங்கிரஸ் மூத்த தலைவர் கவிதா ரெட்டி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த 8-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த பின்னணியில் கவிதா ரெட்டி மீது ளித்த புகாரை சம்யுக்தா திரும்ப பெற்றுள்ளார். கோமாளி நடிகையின் பெருந்தன்மை குறித்து தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

எனினும் இதே விவகாரத்தில் தொடர்புடைய அனில் ரெட்டி உள்ளிட்ட சிலர் மீது அளித்த புகாரை சம்யுக்தா திரும்ப பெறவில்லை.

அவர்கள், சம்யுக்தா மீது போதை பொருள் கடத்தல் புகார் கூறியதால் அவர்கள் மீதான புகாரை வாபஸ் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

சம்யுக்தா விளக்கம்

சம்யுக்தா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும். கவிதா ரெட்டியின் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு எதிரான வழக்கை தொடர மாட்டேன்.

பூங்காவில் என்னை மிரட்டிய அனில் ரெட்டி மற்றும் அவருடன் இருந்தவர்கள் மீது வழக்கை தொடருவேன். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ரு நம்புகிறேன்.

ஷரத்தா, பவன் ஆகியோர் எனக்கு பக்கபலமாக இருந்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *