பூமியிலிருந்து விடை பெறுகிறேன்…

கன்னட திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகை ஜெயஸ்ரீ ராமையா. கன்னட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்தார்.


சில நாட்களுக்கு முன்பு அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அழுத முகத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், என்னிடம் பணம் இருக்கிறது. ஆனால் மன அமைதி இல்லை. தனிப்பட்ட பிரச்சினைகளால் மனஉளைச்சலில் அவதியுறுகிறேன். சிறு வயது முதலே ஏமாற்றத்தை சந்தித்து வருகிறேன். இனிமேலும் ஏமாற்றத்தை சந்திக்க விரும்பவில்லை. வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிட்டேன். பூமியிலிருந்து விடைபெறுகிறேன்” என்று உருக்கமாக கூறினார்.

நடிகர் கிச்சா சுதீப்


சிறிது நேரத்தில் வீடியோ பதிவையும் நீக்கிவிட்டார். கன்னட திரையுலகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்தது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அண்மையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஜெயஸ்ரீவின் வீடியோ பதிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப் விரைந்து செயல்பட்டு, ஜெயஸ்ரீ ராமையாவை தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டிருக்கிறார்.


இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் ஜெயஸ்ரீ ராமையா வெளியிட்டுள்ள பதிவில், “சுதீப் சாருக்கு நன்றி. என் மீது அக்கறை செலுத்தி என்னை காப்பாற்றிவிட்டீர்கள். நண்பர்களே என்னை மன்னித்துவிடுங்கள். உங்களை பயமுயறுத்திவிட்டேன். நான் இப்போது பழைய நிலைக்கு திரும்பிவிட்டேன். ஊடகத்தின் ஆதரவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் பழைய டிக்டாக் வீடியோ ஒன்றையும் ஜெயஸ்ரீ ராமையா பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *