நடிகை தமன்னாவுக்கு கொரோனா

நடிகை தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் தமன்னா (வயது 30). இவரது தந்தை வைர வியாபாரி. 

13 வயதில் இந்தி திரையுலகில் கால் பதித்த நடிகை தமன்னா, தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்தியிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் இருந்த அவர் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற வெப் தொடர் படப்பிடிப்பில் பங்கேற்றார். 

அண்மையில் தமன்னாவின் தாய், தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை தமன்னா

இதனை சமூக வலைதளம் மூலம் தெரிவித்த தமன்னா, தனக்கும் வீட்டின் இதர ஊழியர்களுக்கும் தொற்று இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

ஹைதராபாத் படப்பிடிப்பில் இருந்த நடிகை தமன்னாவுக்கு காய்ச்சல் அறிகுறிகள் அதிகமானது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு நடத்தப்பட்ட சளி மாதிரி பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *