என்னது.. நம்ம தனுஸ்ரீ தத்தா.. சாமியாராகிவிட்டாரா?

கோலிவுட், பாலிவுட்டின் பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா முழுமையான சாமியாராக மாறியிருக்கிறார்.


பிஹாரை பூர்விகமாகக் கொண்ட தனு ஸ்ரீ தத்தா கடந்த 2004-ம் ஆண்டில் ‘பெமினா மிஸ் இந்தியா’வாக தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் முதல் 10 இடங்கள் வரை முன்னேறினார். அதன்பிறகு அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இப்போதைய தனுஸ்ரீ தத்தா


இதன்பின் பாலிவுட் உலகில் ஆழமாக கால் பதித்த தனு ஸ்ரீ, தென்னிந்தியா வரை தென்றலாக வீசினார். கடந்த 2008-ம் ஆண்டில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படத்தில் விஷாலின் ஜோடியாக தமிழ் ரசிகர்களின் மனதில் நங்கூரமிட்டார். பாலிவுட் திரைப்படங்களில் கவர்ச்சியின் உச்சத்துக்கு சென்றார். அவரது அலை படிப்படியாக ஓய்ந்து திரைத் துறையில் இருந்து கரை ஒதுங்கினார்.


ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை மீ டூ (நானும் கூட) புரட்சி பரவியபோது கடந்த 2018 செப்டம்பரில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் நானா படேகர் (காலா படத்தின் வில்லன்) மீது தனு ஸ்ரீ தத்தா பகிரங்கமாக பாலியல் புகார் கூறினார். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டு அப்படியே அடங்கிவிட்டது.


அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட தனுஸ்ரீ தத்தா உலக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஆன்மிகத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். 36 வயதானாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. முழுமையாக ஆன்மிக குருவாகவே மாறிவிட்டார். அமெரிக்காவில் இந்திய சாமியார்களுக்கு மவுசு அதிகம். யோகா, தியானம் என்று கூறினால் அமெரிக்கர்கள் கொத்தடிமைகளாக மாறிவிடுவார்கள்.

View this post on Instagram

East meets west!! Modern yogini.

A post shared by Tanushree Dutta (@iamtanushreeduttaofficial) on


அமெரிக்காவின் பிரபல ஆன்மிக குருவாக மாறிவிட்ட தனுஸ்ரீ தத்தா மாதந்தோறும் ஆன்லைனில் 3 மணி நேரம் தியான வகுப்பு நடத்துகிறார். கடந்த மாதம் 7-ம் தேதி அவரது தியான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த மாதம் வரும் 8-ம் தேதி இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தியான நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் தனுஸ்ரீ ஆழ்நிலை தியானத்தை கற்றுக் கொடுக்க உள்ளார். விருப்பமுள்ளவர்கள் அவரோடு இணைந்து அமைதியை தேடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *