அம்பாசமுத்திரம் அம்பானி நடிகைக்கு கொரோனா

பஞ்சாபை பூர்விகமாகக் கொண்ட மும்பையை சேர்ந்த பிரபல நடிகை நவனீத் கவுர். இவர் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்தின் அரசாங்கம், கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு நவனீத் கவுர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது.

கணவர் ரவி ராணாவுடன் நவ்னீத் கவுர்


அமராவதி தொகுதிக்கு உட்பட்ட மருத்துவமனையில் கொரோனா பெண் நோயாளி ஒருவர் அண்மையில் மானபங்கம் செய்யப்பட்டார். அந்த மருத்துவமனைக்கு நவனீத் கவுர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்ட பெண்ணையும் சந்தித்துப் பேசினார்.

நடிகை நவ்னீத் கவுர்


இந்நிலையில் அவருக்கும் அவரது கணவரும் எம்எல்ஏவுமான ரவி ராணாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் 7 வயது மகள், 4 வயது மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நவ்னீத் கவுர் உட்பட அவரது குடும்பத்தில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *