“அசரமாட்டேன்; இருப்பினும் நானும் ஒரு பெண்தான்” – காவல் நிலையத்தில் கதறி அழுத நடிகை வனிதா

`நேர்மையாக ஒரு விஷயத்தை பண்ண செய்தேன், மத்தவங்களைப் போல நான் ஏமாற்றவில்லை’ என்று காவல் நிலையத்தில் கண்ணீர்மல்க கூறினார்.

நடிகை வனிதா இன்று சென்னை எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்துக்கு வந்தார். உதவி கமிஷனர் சம்பத்தைச் சந்தித்து ஏற்கெனவே கொடுத்த புகார் தொடர்பாக பேசினார். பின்னர் அவர் காவல் நிலையம் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆவேசமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் பேசினார்.

actress vanitha
வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா கூறுகையில், “கடந்த சில வாரங்களாக என்னைப்பற்றிய விஷயம்தான். ஒரு லேடி, முதலில் அவர்கள் யாரென்று தெரியாமல் இருந்தது. தற்போதுதான் அவர்கள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. அந்த லேடி என்னைப்பற்றிய தப்பு தப்பான தகவல்களையும் வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார்கள். அது எல்லை மீறி போனது.

முதலில் அதை நான் கண்டுக்கொள்ளவதில்லை. அளவுக்கு மீறி சென்றதால் என்னுடைய வழக்கறிஞர் ஸ்ரீதரிடம் பேசினேன். என்னுடைய குடும்ப வழக்கறிஞர் ஸ்ரீதர் பற்றியும் தவறாக செய்திகள் வெளிவந்தன. அதனால்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தேன். அந்த லேடியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஒருவரும் தேவையில்லாத வார்த்தைகளை பெர்ஷனலாக பேசினார். மாமன் மாதிரியாகவும் எதிர்கட்சி வழக்கறிஞர் போல பேசிக் கொண்டிருந்தார்.

நடிகை வனிதா
நடிகை வனிதா

உடனே அவரை பெர்ஷனலாக பேசியபோது திமிராக நடந்துக் கொண்டார். மீடியாவிலும் தப்பு தப்பாக பேச ஆரம்பித்துவிட்டார். கொரோனா காலக்கட்டத்தில் போர் அடிக்கிறது, பப்ளிசிட்டி இல்லை. யாருக்குமே வேலை வாய்ப்பு இல்லை என்பதால் என்னுடைய பெயர் பாப்புலாக இருப்பதால் சூழ்நிலையில் என்னை தேவையில்லாமல் அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அவர் தயாரிப்பாளராக பேமஸாகியதை விட பலரை விமர்சித்துதான் பேமஸாகினார். நான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். பல உண்மைகள் தெரியவந்தது. அவர்கள் குறித்த விவரம் தெரிவந்துள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் சொல்வார்.

ஒரு சில உண்மைகள் வெளியில் வரும் வரை அனைவரும் பொறுமையாகவும் ஒத்துழைப்பும் கொடுங்கள். நான் மூன்று குழந்தைகளுக்கு தாய். இத்தனை வருஷம் சிங்கிள் மதராக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். அப்பா அம்மா சப்போர்ட் இல்லை. அதனால் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவறான விஷயம். சினிமா தயாரிப்பாளர் ஒருவர் சினிமா துறையில் இருக்கிற என்னை அசிங்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். அவரை நான் பார்த்ததுகூட இல்லை. அந்த தயாரிப்பாளருக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமும் இல்லை. மீடியாக்கள் இதை பெரிதுப்படுத்தாதீர்கள். அந்த லேடிக்கும் தயாரிப்பார்களுக்கும் பழக்கம் இருக்கிறது. அவர்கள்தான் பின்னணியில் இருக்கிறார்கள்.

எனக்கும் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. என் மகன் வளர்ந்து விட்டான். அவன் மனவேதனையில் இருக்கிறான் என்று பொய்யான தகவல் வருகிறது. ஆனால் அது உண்மையில்லை. என் மகன் நிம்மதியாகத் இருக்கிறான். அவர் அப்பா நல்லப்படியாக பார்த்துகிட்டு இருக்கிறார். அவருடனும் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

நடிகை வனிதா
நடிகை வனிதா

என்னோட பெர்ஷனல் என்னோட பெர்ஷனல் எனக்கு 40 வயதாக போகிறது. அதனால் எனக்கு துணை வேண்டும் என்றுதான் ஒரு முடிவை எடுத்தேன். நேர்மையாக ஒரு விஷயம் பண்ண வேண்டும் என்றுதான்… மற்றவங்களைப் போல நான் ஏமாற்றவில்லை. அதில் ஒரு சிக்கல். அது பிரச்னையே இல்லை. அதை லாயர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

என் கேரக்டரை பற்றி பேசுவது எனக்கு மனவருத்தமாக இருக்கிறது. கீழ்தரமாக பேகிறார்கள். எனக்கு 2 பொம்பள பிள்ளைகள் இருக்கிறார்கள். வெளியில் போகக்கூட கஷ்டமாக இருக்கிறது. தயவு செய்து யாரும் சம்பந்தமில்லாத விஷயங்களுக்குள் வராதீங்க. போலீஸ்கிட்ட புரிய வச்சிருக்கோம். பெண்கள் மேல குறியாக வைத்து அதுவும் சப்போர்ட் இல்லாத பெண்களை குறி வைத்து இப்படி பண்ணுகிறார்கள்.

நான் 3 குழந்தைகளுக்கு நான் தாய். என் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள். எல்லாமே பொய்யான நியூஸ். சரியான ஆக்ஷன் எடுக்கப்போகிறார்கள். அப்போதுதான் அந்தப் பெண் யாரென்று தெரியும் என்று கூறினார். ,இதற்கு மேலும் என்னால் யார்கிட்டயேயும் நிற்க முடியாது. தயவு செய்து நடவடிக்கை எடுங்க. நான் ஸ்ட்ராங் உமன், எதற்கும் அவவ்ளவு சீக்கிரம் அசரமாட்டேன். இருப்பினும் நானும் ஒரு பெண்தான். எவ்வளவுதான் போராட முடியும்” என்றார்.

நடிகை வனிதா
நடிகை வனிதா

வழக்கறிஞர் ஸ்ரீதர் “ஒருவாரமாக சைபர் புல்லிங் என்று சொல்வார்கள். கண்ணுக்கு தெரியாத எதிரி என்று சொல்வார்கள். மதுரையிலிருந்து வந்த பெண் அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்திவருகிறார்கள். கொலை மிரட்டல் விடுத்தார்கள். அதை காவல் நிலையத்தில் சொல்லியிருக்கிறோம். அந்த லேடி குறித்து விசாரித்தபோது அந்தப் பெண்ணும் கஸ்டமர்களும் பேசிய வாய்ஸ் ரெக்கார்டு என்னிடம் இருக்கிறது. அதை ரிலீஸ் பண்ணுவேன்.

அந்த லேடி ஒரு கஞ்சா வியாபாரி. அரசியல் வாதி, சினிமா துறையைச் சேர்ந்த லேடி, ஏன் என்னைப்பற்றியும் பேசியிருக்கிறார்கள். ஏன் காவல் துறையைப் பற்றியும் பேசுவார்கள். பிரபலமான தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் இருக்கும் ஒருவரும் பின்னணியில் இருக்கிறார். அவரின் ஆடியோவும் என்னிடம் உள்ளது. இருவரும் பேசிக் கொள்கிற வீடியோவும் உள்ளது. இவர்கள் எதற்கு இப்படி செய்கிறார்கள் என்று விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்தன. என் குடும்பத்தை பேச அவளுக்கு என்ன உரிமை உள்ளது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *