குழந்தைகளை படிக்க வைங்க – நடிகை வரலட்சுமி உருக்கம்

இலவச கல்வி உரிமைச் சட்ட உரிமைகளைப் பயன்படுத்தி குழந்தைகளை படிங்க வைங்க என்று நடிகை வரலட்சுமி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்திய குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய கொள்கைக்காக கடந்த 2006-ம் ஆண்டில் பூமி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அய்யனார், ஹரிசங்கர், பிரகலாதன் ஆகியோர் இணைந்து இந்த அறக்கட்டளையை தொடங்கினார். தர்போது பெங்களூரு, சண்டிகர், சென்னை, கோவை, டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, புனே, தஞ்சாவூர், திருச்சியை மையமாகக் கொண்டு பூமி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.


பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் பூமி அறக்கட்டளைக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் கோலிவுட்டின் முன்னணி நடிகை வரலட்சுமி, பூமி அறக்கட்டளையின் தன்னலமற்ற சேவையை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இலவச கல்வி திட்டத்தில் குழந்தைகளை படிக்க வைங்க. அவர்களை கனவுகளை நிறைவேற்றுங்க” என்று அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருத்திருக்கிறார். உதவி தேவைப்படுவோர் 8144224444 என்ற எண்ணை அழைக்கலாம். https://www.bhumi.ngo/home-7/ இணையத்தில் முழு விவரங்களைப் பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *