சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? – நடிகை விஜயலட்சுமி கேள்வி

நடிகை விஜயலட்சுமி, கடந்த சில தினங்களுக்கு முன் சமூகவலைதள லைவ் வீடியோவில் பேசியபடி ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டபடியே மயங்கினார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை காயத்ரி ரகுராம், திருவான்மியூரில் உள்ள நடிகை விஜயலட்சுமி வீட்டுக்குச் சென்றார்.

பின்னர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். சிகிச்சைக்குபிறகு நடிகை விஜயலட்சுமி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் மருத்துவமனையில் இருந்தபோது மாஜிஸ்திரேட் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

தற்போது வரை சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. மேலும் தற்கொலைக்கு முயன்ற தனக்கு காயத்ரி ரகுராம் மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுது உதவி செய்ததார். ஆனால் இன்று அவர் உடன் இல்லை.

தனது அனைத்து நிகழ்வுகளிலும் யாரோ சிலர் செயல்படுகின்றனர். தனக்கு தொடர்ந்து இணையதளங்களில் அவதூறு தெரிவித்த ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கவிலஙலை. அதனால்தான் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். மீண்டும் இதே நிலை நீடித்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொளள்வேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *