மருத்துவ தேர்வு எழுதிய ரவுடி பேபி சாய் பல்லவி

மருத்துவ தேர்வு எழுதிய ரவுடி பேபி சாய் பல்லவி -யை சக மாணவர்கள் மொய்த்து செல்பி புகைப்படங்களை எடுத்தனர்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்தவர் சாய் பல்லவி.

கோவையில் பள்ளி கல்வியை முடித்த அவர் ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்.

கடந்த 2005-ம் ஆண்டில் திரையுலகில் கால் பதித்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.

திருச்சியில் மருத்துவ தேர்வு எழுதிய நடிகை சாய் பல்லவியுடன் சக மாணவிகள் செல்பி புகைப்படம் எடுத்தனர்.
திருச்சியில் மருத்துவ தேர்வு எழுதிய நடிகை சாய் பல்லவியுடன் சக மாணவிகள் செல்பி புகைப்படம் எடுத்தனர்.

மாரி 2 திரைப்படத்தில் தனுஷுடன் அவர் கோரத்தாண்டவமாடிய ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டியெல்லாம் சென்றடைந்து அவருக்கு பெரும் புகழ் சேர்த்துள்ளது.

யூ டியூபில் அந்த பாடல் பல சாதனை படைத்து உலகம் முழுவதும் அவர் பிரபலமாகி உள்ளார்.

வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவ, மாணவியர்கள் இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற தனி தேர்வு எழுத வேண்டும்.

சாய் பல்லவியுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட மாணவர்கள்.
செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட மாணவர்கள்.

எப்எம்ஜிஇ (Foreign Medical Graduate Examination) என்றழைக்கப்படும் இந்த தேர்வு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெற்றது.

திருச்சி சிறுகனூர் எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் நடிகை சாய்பல்லவி எப்எம்ஜிஇ தேர்வை எழுதினார்.

தேர்வு எழுதிய பிறகு அவரை அடையாளம் கண்டு கொண்ட சக மாணவ, மாணவியர் அவரை சூழ்ந்து மொய்த்தனர். அவரோடு செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

அவர் தேர்வு எழுத வந்த வீடியோவும் அவரது செல்பி புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகின்றன.

திருச்சியில் தேர்வு எழுதிய சாய் பல்லவி.
திருச்சியில் தேர்வு எழுதிய சாய் பல்லவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *