தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்ட மேற்படிப்பு, பிஜிடிஎல்ஏ, டிஎல்எல், ஏஎல் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொழிலாளர் மேலாண்மை முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிவுற்றுள்ளது. இதனை நீட்டிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக். 23-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு 044-2844 0102, 2844 5778, 98841 59410 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *