கேந்திர வித்யாலயா மாணவர் சேர்க்கைக்கு ஏப். 1 முதல் விண்ணப்பிக்கலாம்

கேந்திர வித்யாலயா மாணவர் சேர்க்கைக்கு ஏப். 1 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 48 கேந்திர வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையை கேந்திரிய வித்யாலயா இயக்குநரகம் இணைய வழியில் நடத்தி வருகிறது. இதன்படி வரும் கல்வியாண்டுக்கான 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.

விருப்பமுள்ளவர்கள் https://kvonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதர வகுப்புக்கான சேர்க்கைக்கு ஏப்ரல் 8 முதல் 15-ம் தேதி வரை நேரடியாக சென்று பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 1 சேர்க்கைக்கான படிவங்களை www.kvsangathan.nic.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *