வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகத்துக்கு வருகை தந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதன் ஒரு பகுதியாக சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளை அவர் தொடங்கிவைத்தார். இந்த பணிகள் ரூ.61,843 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
விழாவில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டணி தொடரும் என்று கூறினார்.