அதிமுக முதல்வர் வேட்பாளர் முதல்வர் பழனிசாமி

அதிமுக முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது.

கடந்த மாதம் நடந்த செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதன்தொடர்ச்சியாக பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

முதல்வர் வேட்பாளர் தொடர்பாக பழனிசாமி, பன்னீர்செல்வத்தின் பிரதிநிதிகள் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 3.30 மணி வரை 9 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போதைய முதல் பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதே நேரத்தில், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டது.

இந்த குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், ஆர்.காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ ஏ.சி.டி பிரபாகர், முன்னாள் எம்.பி பி.எச் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பா.மோகன், முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *