நீட் தேர்வில் மாணவிகளின் ஆபரணங்களை அகற்றக்கூடாது

நீட் தேர்வில் மாணவிகளின் ஆபரணங்களை அகற்றக்கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளின் சேர்க்கைக்கு தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தேர்வின்போது மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

மாணவிகளின் ஆபரணங்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்படுகின்றன. குறிப்பாக திருமணமான பெண்களின் தாலி, மெட்டி உள்ளிட்ட ஆபரணங்களை கழற்றப்படுகின்றன.

இந்நிலையில் நீட் தேர்வு எழுத வரும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற நிர்பந்திக்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *