வேளாண்மையின் அருமை, பெருமைகளை இளம் சந்ததியினர் அறிய சென்னையில் ரூ.2 கோடியில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும். சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.59.55 கோடியில் கூட்டுப்பண்ணைய திட்டம் செயல்படுத்தப்படும். 13,300 விவசாயக் குடும்பம் பயனடைய ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.