வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் வளங்குன்றா வேளாண்மைக்கான துறை ஏற்கெனவே இயங்கி வருகிறது. அது நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் என்று மாற்றப்படும். இதற்கு முதல்கட்டமாக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்படும்.
தேசிய வேளாண் உயர் கல்வி திட்டம் மூலம் ரூ.1.3 கோடி பெற்று இளநிலை மாணவர்களின் தொழில் முனையும் திறன் மேம்படுத்தப்படும். வேளாண் மாணவர்கள் தொழில் முனைவோராக வளர்ச்சி பெற வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளில் விருப்ப பாடங்கள் சேர்க்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.