தமிழகத்தின் 25 உழவர் சந்தைகளில் 2.75 கோடி ரூபாயில் உரங்கள் தயாரிக்கும் விதமாக கட்டமைக்கப்படும். இதன்மூலம் வீணாகும் காய்கறிகளை வீணாக குப்பைகளில் வீசி எறியாமல் சரியான முறையில் பயன்படுத்தினால் உரங்களாக மாறும்.
உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விலை விவரங்கள் டிஜிட்டல் பலகைகளில் அறிவிக்க வழிவகை செய்யப்படும். முதல் கட்டமாக வரத்து அதிகம் உள்ள, 50 உழவர் சந்தைகள், 50 விற்பனை கூடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்
கடலூர், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை, வேலூர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் புதிய உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.