அமைச்சர் அன்பழகனிடம் வேளாண் துறை ஒப்படைப்பு

அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் வேளாண் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்மு கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த வேளாண் துறை, உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இனிமேல் வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் சேவைகள், தோட்டக் கலை ஆகிய பிரிவுகளை அமைச்சர் அன்பழகம் கவனிப்பார். இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமை அமைச்சரவையில் ்வர் உட்பட 31 அமைச்சர்கள் இருந்தனர். துரைகண்ணுவின் மறைவால் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக குறைந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *