மணல் பிசினஸில் அ.தி.மு.க பிரமுகர்?

தமிழகம் முழுவதும் மணல் பிசினஸில் தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க பிரமுகர் மறைமுகமாக கால்பதிக்க உள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் காட்சிகள் மாறத் தொடங்கியிருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியில் பவர் புல் பதவியிலிருந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடபெயர்ச்சி நடந்து வருகின்றன. அ.தி.மு.க ஆட்சி தயவில் பிசினஸ் செய்து வந்த சில தொழிலதிபர்களும் தி.மு.கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக மணல் பிசினஸில் ஈடுபட விரும்பியவர்கள், தி.மு.கவின் மூத்த நிர்வாகிகள் மூலம் காயை நகர்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை நடத்த மணல் பிசினஸில் அ.தி.மு.க, தி.மு.க ஆட்சிக்காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த மணல் மனிதர் தலைமையிலான டீம்தான் இந்தத் தடவையும் மணல் குவாரிகளை நடத்த காயை நகர்த்தியிருக்கிறது.

அதற்காக மாதத்துக்கு 300 சுவிட்ஸ் பாக்ஸ்களை கொடுக்கவும் அந்தத் தரப்பு சம்மதம் தெரிவித்திருக்கிறது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் விசுவாசமாக இருந்தவர் என்பதால் அவருக்கு மணல் குவாரிகளை நேரிடையாக நடத்த க்ரீன் சிக்னல் கொடுத்தால் விமர்சனங்கள் எழும் என்பதற்காக அவரின் நம்பிக்கைக்குரிய கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வரின் பெயரைக் கொண்டவர் களமிறங்கியிருக்கிறாராம்.

அந்த மணல் மனிதர் தரப்பினரிடம்தான் பிசினஸிக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருப்பது கூடுதல் ப்ளஸாகக் ஆளுங்கட்சி தரப்பு பார்க்கிறது. இதுதவிர அவர்களை எதிர்த்து மணல் பிசினஸை மற்றவர்களால் நம்பிக்கைக்கு பாத்திரமாக செய்ய முடியுமா என்ற சந்தேகமும் ஆளும் தரப்பினரிடையே உள்ளது. அதனால் மீண்டும் மணல் மனிதர் தரப்பினருக்கே குவாரி டென்டரைக் கொடுக்க இறுதிகட்ட முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

மணலை தவிர்த்து சவுடு மணல் பிசினஸிக்கு எடுக்கப்பட்ட முடிவில் அ.தி.மு.கவைச் சேர்ந்த சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஒருவரின் நிழலும் சினிமா தயாரிப்பாளருமான ஒருவருக்கு டென்டர் கொடுக்கப்படவுள்ளதாம். அதற்கு மாதம் 25 சுவிட்ஸ் பாக்ஸ் என இறுதி செய்யப்பட்டிருக்கிறதாம்.

தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால் ஆறுகளில் மணல் எடுப்பதில் சிரமம் ஏற்படும் எனக்கருதிய அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு தரப்பு, தமிழகம் முழுவதும் சவுடு மணல் பிசினஸில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறது. அ.தி.மு.க சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த நடிகர் ஒருவரின் நிழலான மூன்றெழுத்துக் கொண்ட ஒருவர் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறராம். எல்லா கட்ட பேச்சுவார்த்தையும் முடிந்து இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறதாம். இதற்கிடையில் அம்மன் பெயரைக் கொண்ட டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் மணல் பிசினஸில் தனக்கும் பங்கு வேண்டும் என முட்டி மோதிவருகிறராம்.

மணல் பிசினஸில் ஈடுபடும் மணல் மனிதர், தேர்தலுக்கு முன்பே இரண்டு கட்சிகளுக்கும் மூன்று இலக்கத்தில் சுவிட்ஸ்களைக் கொடுத்து முன்பதிவு செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மணல் பிசினஸ் மட்டும் ஒரு தரப்புக்கே என்பது மட்டும் மாற்றமுடியாது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *