21 மாவட்டங்களில் காற்றுத் தர கண்காணிப்பு

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழகத்தின் முக்கிய நகரங்கள், தொழிற்சாலைகள் நிறந்த 28 இடங்களில் தேசிய காற்று மண்டல கண்காணிப்பு திட்டத்தின் கீழ் வாரத்தில் 2 நாட்கள் காற்றின் மாதிரி சேகரிக்கப்பட்டு தரம் கண்காணிக்கப்படுகிறது.

சென்னையில் 5 இடங்களிலும் கும்மிடிப்பூண்டி, கோவை, பெருந்துறை, தூத்துக்குடியில் தலா ஒரு தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்களும் செயல்படுகின்றன. இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, திண்டுக்கல், சேலம், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 21 மாவட்டங்களில் புதிதாக 25 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய நிலையங்களை முதல்வர் பழனிசாமி கடந்த வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *