வரும் பொங்கல் முதல் தமிழக விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதன்பின் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
“தமிழகத்தில் உள்ள அனைத்து விமானங்களிலும், தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களிலும் முதலில் தமிழில் அறிவிப்பு வெளியிடப்படும். இந்த திட்டம் வரும் பொங்கல் முதல் அமலுக்கு வரும்” என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.