ஏர்டெல் 5 ஜி சேவை சோதனை முயற்சி

ஏர்டெல் 5ஜி சேவை சோதனை முயற்சி ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் தற்போது 4ஜி தொலைத்தொடர்பு சேவை பயன்பாட்டில் உள்ளது. அடுத்த கட்டமாக 5 ஜி சேவையை அறிமுகம் செய்ய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதில் ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில்  5 ஜி சேவை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் நாடு முழுவதும் 5 ஜி சேவை வழங்கப்படும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது. 

இந்த ஆண்டின் பிற்பகுதியில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று ஜியோ நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. எனவே இந்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5 ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *