கொரோனாவுக்கு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராதனாவும் இன்றிரவு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராதனா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 11-ம் தேதி அமிதாபும் அபிஷேக்கும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராதனா ஆகியோர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். இருவருக்கும் காய்ச்சல் பாதிப்பு அதிகமானதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இன்று இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ஆராதனா நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.