`பேசி தீர்வு காண முயற்சிக்க வேண்டும்’ – ஏஐடியூசி பொதுச் செயலாளர் தகவல்

அரசு போக்குவரத்து கழகங்களில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட நிர்வாக இயக்குநர்களைச் சந்தித்து கூட்டமைப்பு சார்பில் பேசி தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என ஏஐடியூசி பொதுச் செயலாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் கூட்டம்


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியூசி) நிர்வாகக் குழு கூட்டம் ஆன் லைன் செயலியில் நடைபெற்றது.
இதில் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம், செயலாளர்கள் நந்தாசிங், பி.பாஸ்கர், துணைத் தலைவர்கள் செய்யது இப்ராகிம், செல்வராஜ் (கரூர்), என் கோபிநாதன் (நாகை), நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாண்டியன், பி.சோமசுந்தரம் (விருதுநகர்), வி.குப்புரங்கன், டி.ராஜேந்திரன் (திருவண்ணாமலை), முருகேசன், சுப்பிரமணி (காரைக்குடி), கணேசன் (புதுக்கோட்டை), ரவி, நாகராஜன், துரைசாமி, சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

சம்பளம்


கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் கூறுகையில், “
ஜூன் மாத சம்பளம் வழங்கியதில் உள்ள குறைபாடு சுழற்சி முறையில் பணி வழங்குவதில் காட்டும் பாகுபாடு, பொது முடக்க காலத்தில் நிர்வாகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான கடிதம் அரசு முதன்மை செயலாளருக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்களுக்கு கூட்டமைப்பு சார்பாக ஜுலை 7-ம் தேதி சமர்பிக்க வேண்டும். பேசி தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

ஓய்வூதிய பலன்கள்

அரசு ஆணையை மீறும் நிர்வாகங்கள் மீது தொழிலாளர் ஆணையர் மூலமாக நடவடிக்கை எடுக்கவும் இயக்கங்கள் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 2019 ஏப்ரல் முதல் ஓய்வு கால பண பலன்கள் வழங்கப்படவில்லை.

அரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் புனரமைக்கப்பட்டு செயல்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து இயக்கங்கள் நடத்துவது, அரசு நிதித்துறை செயலாளரைச் சந்தித்து தீர்வு காண முயற்சிப்பது அவசியமெனில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

பொது போக்குவரத்தான அரசு போக்குவரத்து கழகங்களில் தனியார் தொழில்நுட்பம் மற்றும் மூலதனம் செய்திட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *