கடந்த 2014-ம் ஆண்டில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரது மகளாக நடித்தவர் கேரளாவை சேர்ந்த சிறுமி அனிகா.
அதன்பின் விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற, கண்ணான கண்ணே பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து அஜித்தின் வலிமை படத்திலும் அனிகா நடிக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, இப்போது பெரியவராகிவிட்டார். அவர் கேரள பாரம்பரிய உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அஜித்தின் ரீல் மகள் என்ற வகையில் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் அனிகா பிரபலம் அடைந்துள்ளார். அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலு ஹெர்பல்ஸ் என்ற அழகுசாதன பொருளையும் அனிகா விளம்பரப்படுத்தியுள்ளார்.