கேரளா, மேற்குவங்கத்தில் 9 அல்-காய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அல்-காய்தா தீவிரவாதிகள் தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தீவிர விசாரணை நடத்தி வந்த என்ஐஏ அதிகாரிகள், மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத்தின் 11 இடங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, நஜ்மஸ் சாகிப், அபு சூபியன், மொய்னூல் மண்டல், லீ யான் அகமது, அல் மமூன் கமல், அதியூர் ரஹ்மான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல கேரளாவின் எர்ணாகுளம் பகுதியின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது முர்ஷித் ஹாசன், அய்யூப் பிஸ்வாஸ், முஷாரப் ஹாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து டிஜிட்டல் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள், வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.