ஏப். 1 முதல் 8 அரசு வங்கிகளின் காசோலை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அரசு வங்கிகள் அண்மையில் ஒன்றிணைக்கப்பட்டன. இதன்படிதேனா வங்கி, விஜயா வங்கிகள் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. கார்பரேஷன், ஆந்திரா வங்கிகள் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
ஓரியன்டல் வங்கி, யூனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும் சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும் அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டன.
இந்நிலையில் வங்கிகள் இணைப்பு காரணமாக பழைய 8 அரசு வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனா வங்கி, விஜயா வங்கி, கார்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்டட் வங்கி, சின்டிகேட் பேங்க், அலகாபாத் பேங்க் ஆகிய வங்கிகளின் காசோலைகளை வைத்திருப்போர் அவரவர் வங்கி கிளைகளை அணுகி புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.