கொரோனா.. அனைத்து கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை…

கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் 4-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கடந்த செப்டம்பரில் கரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தது. நாளொன்றுக்கு 99,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. தற்போது கேரளா, டெல்லியை தவிர்த்து இதர மாநிலங்களில் புதிய வைரஸ் தொற்று  குறைந்து கொண்டே வருகிறது. எனினும் ஐரோப்பிய நாடுகளை போன்று இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி கொரோநா தடுப்பூசி தயாரிக்கும் மருந்து உற்பத்தி ஆலைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக புனேவை சேர்ந்த ஜெனோவா பயோ பார்மா, ஹைதராபாத்தை சேர்ந்த பயாலாஜிக்கல் இ லிமிடெட், ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரேட்டரீஸ் ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது என்பதை பிரதமர் கேட்டறிந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 4-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பாக கடந்த ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தற்போது 2-வது முறையாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அளிக்கும் ஆலோசனைகளின்பேரில் மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று தெரிகிறது.

எதிர்க்கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *