அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையவசதி

அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையவசதி செய்து கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். 

“குப்பையில் வீசப்படும் மின்னணு சாதன கழிவுகளை கையாள விரிவான கொள்கை வரையறுக்கப்பட வேண்டும். நாட்டில்  5ஜி தொழில்நுட்பத்தை விரைந்து அறிமுகம் செய்ய வேண்டும். 

சுகாதாரம், கல்வி, வேளாண் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.தொழில்நுட்பங்கள் மூலம் சிறுவியாபாரிகளின் சந்தைவாய்ப்பை பெருக்க முடியும். மொபைல்போன் தொழில்நுட்பம் மூலம் கரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.  

அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் ‘பைபர்-ஆப்டிக்’ மூலம் அதிவேக இணைய வசதி ஏற்படுத்தப்படும். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த கிராமங்கள், வடகிழக்கு மாநிலங்கள், லட்சத் தீவிலும் அதிவேக இணைய வசதி செய்து கொடுக்கப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *