விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் இ-பாஸ் நடைமுறை வருகிற ஆக.17 முதல் அமலுக்கு வரும்.

ஆதார் அல்லது ரேசன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்.

திருமணம், மரணம், அவசர மருத்துவ சிகிச்சை ஆகிய காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது.

தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

தொழில் துறையினர், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன. முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழகம் முழுவதும் பயணிக்க ஏதுவாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனே வழங்கப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *