கடந்த 2009-ம் ஆண்டில் மலையாள திரையுலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக மின்னுகிறார் அமலா பால். ஆடை படத்தில் துணிச்சலாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.
கொரோனாவால் திரைப்படத் துறை முடங்கியிருக்கும் நிலையில் நடிகைகள் பலரும் தங்கள் கவலையை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் நடிகை அமலா பால் துளியும் கவலையின்றி இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியை பரப்பி வருகிறார்.
அமைதியை தேடி பல ஆண்டுகளை ஏன் தொலைக்க வேண்டும். எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று அழகான அறிவுரைகளை அள்ளி வீசி வருகிறார். அபிஜித் பால் என்று மாலுமி வீடு திரும்பியதை அமலா பால் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். இன்ஸ்டாவில் அவரது பதிவு வெளியாகி சில நாட்களான பிறகும் வீடியோ வீதி, வீதியாக சுற்றிக் கொண்டிருக்கிறது.