ஜூன் 28-ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது

ஜூன் 28-ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது.

காஷ்மீரின் இமயமலை பகுதியில் அமர்நாத் என்ற குகை பகுதியில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். 

இந்த ஆண்டுக்கான  அமர்நாத் யாத்திரையை தொடங்குவது குறித்து அமர்நாத் கோயில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான குழு கடந்த சனிக்கிழமை கூடி ஆலோசித்தது.

வரும் ஜூன் 28-ம் தேதி அமர்நாத் யாத்திரையை தொடங்குவது என்றும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *