அம்பத்தூர் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு நவ. 20 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வடகரை தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐடிஐ-ல் சேர விரும்பும் மாணவ, மாணவியர் அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் வரும் 20-ம் தேதிக்குள் அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சமர்ப்பித்து சேர்க்கை ஆணையை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.