ஆஸ்பத்திரியில் பெட்..ஆம்புலன்ஸில் சிலிண்டர் இல்லை.. டிரைவரை விரட்டி விரட்டி வெளுத்த உறவினர்கள்…

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த நகரை சேர்ந்த 75 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் 1080 ஆம்புலன்ஸை அழைத்தனர்.


ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பெட் இல்லை. இதனால் ஆம்புலன்ஸிலேயே நோயாளி காக்க வைக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானது. ஆனால் ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லை. சிறிது நேரத்தில் நோயாளி உயிரிழந்தார்.
ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், ஆம்புலன்ஸ் டிரைவரை ஓட, ஓட விரட்டி அடித்து உதைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அடி வாங்கிய ஆம்புலன்ஸ் டிரைவர், போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *