உலகம் சுற்றும் வாலிபன்

அமெரிக்காவின் மோன்டனா மாகாணம் போஸ்மேனை சேர்ந்தவர் பெஞ்சமின் ஹாரிஸ் (வயது 33). ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டின் மேனேஜராக பணியாற்றி வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் மார்க்கெட்டின் வேலை மீது சலிப்பு தட்டியது. வேலையை தூக்கி எறிந்தார். தனது சொந்த வீட்டை விற்றார்.

கையில் கிடைத்த பணம் மூலம் ஒரு பழைய ஆம்புலன்ஸை வாங்கினார். அந்த ஆம்புலன்ஸில் சில மாற்றங்களை செய்து அழகிய வீடாக மாற்றினார். இதில் சமையல் அறை, படுக்கை அறை, கழிப்பறை என அனைத்து வசதிகளும் உள்ளன. இப்போது நடமாடும் வீட்டில் உலகை சுற்றி வருகிறார்.

“வடக்கு அமெரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் பயணம் செய்து வருகிறேன். எனது நடமாடும் வீடு மூலம் உலகம் முழுவதையும் சுற்றி வருவேன். செல்லும் இடமெல்லாம் புதிய அனுபவம் கிடைக்கிறது. கடல், மலை, ஆறு என பல்வேறு இடங்களை கடந்து செல்கிறேன்.

எனக்கு பணத் தேவை என்றால் ஏதாவது ஓரிடத்தில் தங்கி சில காலம் ஏதாவது ஒரு வேலை செய்வேன். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு எனது சுற்றுப் பயணத்தை தொடர்கிறேன். சவாலாக வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது” என்று பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *