மருந்து வாங்க சென்றார் , மரணமானார் – ஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த வீடியோ

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அண்ணா நகரை சேர்ந்தவர் முகிலன் (வயது 27). இந்த மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வற்ற ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது. இதன்படி நேற்று முழு ஊரடங்கு கண்டிப்புடன் அமல் செய்யப்பட்டது.


ஆம்பூர் ஓஏஆர் திரையரங்கம் அருகே முகிலன் நேற்று பைக்கில் சென்றபோது போலீஸார் பிடித்தனர். உடல் நலமில்லாத மனைவிக்கு மருந்து வாங்க செல்வதாக முகிலன் கூறியுள்ளார். இதை ஏற்றுக் கொள்ளாத போலீஸார், பைக்கை பறிமுதல் செய்தனர்.


விரக்தியடைந்த முகிலன் உறவினர் வீட்டில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்து போலீஸாருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீஸார் பைக்கை கொடுக்க மறுத்ததால் அங்கேயே திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

பலத்த தீக்காயமடைந்த அவரை போலீஸார் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முகிலனுக்கு மனைவி லீலாவதி, 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் சரக டிஐஜி காமினி, திருப்பத்தூர் எஸ்பி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். ஆம்பூரில் பதற்றம் நிலவுதால் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *