மத்திய அமைச்சர் அமித் ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்படுகிறார்.
கடந்த 2-ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெடிந்தா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அந்த மருத்துவமனையின் மருத்துவர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் அமித் ஷாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறும்போது, “கொரோனாவில் இருந்து அமித் ஷா குணமடைந்துள்ளார். எனினும் அவர் வீட்டில் சிறிது காலம் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தன.