பொய் செய்தி வெளியிடாதே- ஊடகங்களுக்கு அமிதாப் கண்டிப்பு

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


அதற்கு அடுத்த நாளே அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும் குழந்தை ஆராதயாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தாயும் மகளும் முதலில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். உடல்நிலை மோசமானதால் ஐஸ்வர்யா ராயும் ஆராதயாவும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


மும்பையில் அமிதாப் பச்சனுக்கு 4 பங்களாக்கள் உள்ளன. இந்த பங்களாக்களில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் அமிதாப் குடும்பத்தினருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் இதில் அமிதாப் அவரது மகன் அபிஷேக்குக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்ததாகவும் முன்னணி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.


இதனை அமிதாப் பச்சன் ட்விட்டர் வாயிலாக மறுத்துள்ளார். , “கொரோனாவில் இருந்து நான் மீண்டிருப்பதாக வெளியான செய்தி தவறானது, அப்பட்டமான பொய்” என்று அவர் கண்டித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *